
அல்லாவின் செயலாலே இந்த அகிலம் வாழ்கிறதே.. பாங்காக அழைக்கின்றேன் நீ பண்புடனே பணிவு கொள்வாய்! பாங்காக அழைக்கின்றேன் நீ பண்புடனே பணிவு கொள்வாய்! அல்லாவின் செயலாலே.. - தீன் குலத்துப் பேரழகே நீ திருமறைகள் ஓதிடுவாய்! தீன் குலத்துப் பேரழகே நீ திருமறைகள் ஓதிடுவாய்! முசல்மான் இளங்கன்றே நீ முறையாகத் தொழுதிடுவாய்! முசல்மான் இளங்கன்றே நீ முறையாகத் தொழுதிடுவாய்! அல்லாவின் செயலாலே.. - அருள்மறையின் நாயகனே!.. ஏ.. அன்பாலே உலகாளும் எங்கள் அருள்மறையின் நாயகனே! ஏ.. அருள்மறையின் நாயகனே!.. எந்நாளும் தொழுதிடுவோம் எங்கள் இறையோனே காத்திடுவாய்! அல்லாவின் செயலாலே.. - பிறைநிலவின் ஒளியாலே இங்குப் பேரமைதி திரும்பிடுதே! பிறைநிலவின் ஒளியாலே இங்குப் பேரமைதி திரும்பிடுதே! குறையில்லா மனத்துடனே நாம் நன்றி சொல்லித் துதித்திடுவோம்! அல்லாவின் செயலாலே! - அல்லாவின் செயலாலே இந்த அகிலம் வாழ்கிறதே.. பாங்காக அழைக்கின்றேன் நீ பண்புடனே பணிவு கொள்வாய்! பாங்காக அழைக்கின்றேன் நீ பண்புடனே பணிவு கொள்வாய்! அல்லாவின் செயலாலே..

