
PARANDU PONA PARAVAIGAL - 1
பறந்து போன பறவைகள் நான் உதிர்ந்துப் போன சிறகுகள் உடைந்து போன படகுகள் நான் தனித்து நின்ற துடுப்புகள் கலைந்து போன கவிதைகள் அவள் எழுத மறந்த எழுத்துக்கள் சிதறிப் போன வார்த்தைகள் அவள் விதைத்துப் போன வித்துக்கள் பறந்து போன பறவைகள் நான் உதிர்ந்துப் போன சிறகுகள் உடைந்து போன படகுகள் நான் தனித்து நின்ற துடுப்புகள் அவள் உயரப் பறந்த பருந்துகள் மறந்து போன மவுனங்கள் கரைந்த போன என்தன் கனவுகள் அவள்தான் என்னுள் நினைவுகள் தவறிப் போன தருணங்கள் அவள் சிதைந்துப் போன தவறுகள் ஏங்கி நின்ற கவலைகள் என்னில் தேங்கி நின்ற திவலைகள் பறந்து போன பறவைகள் நான் உதிர்ந்துப் போன சிறகுகள் உடைந்து போன படகுகள் நான் தனித்து நின்ற துடுப்புகள் மனதைக் கொல்லும் நேசங்கள் மண்ணைச் சொல்லும் வாசங்கள் வேகம் கனியா வேசங்கள் வேட்கை தணியா மோசங்கள் எண்ணித் துணியா முடிவுகள் சொல்லித் தெரியா விடிவுகள் தூங்க முடியா இரவுகள் கண்ணீர் வடியா நிலவுகள் பறந்து போன பறவைகள் நான் உதிர்ந்துப் போன சிறகுகள் உடைந்து போன படகுகள் நான் தனித்து நின்ற துடுப்புகள் கலங்கித் தவிக்கும் தியாகங்கள் அவள் புனைவு இல்லா நியாயங்கள் கலங்கம் இல்லா மோகங்கள் அவள் முனகத் தவிக்கும் ராகங்கள் என் மொழிகள் இல்லா அசைவுகள் ஒளிவு இல்லா ஓசைகள் அவள் எழுத இயலா ஆசைகள் என் தேகம் இல்லா தேசங்கள் பறந்து போன பறவைகள் நான் உதிர்ந்துப் போன சிறகுகள் உடைந்து போன படகுகள் நான் தனித்து நின்ற துடுப்புகள்

