
[verse 1] மெல்லியத் தூறலாய் உன் நினைவுகள் – அது சொல்லில் எழுதா கவிதைகள் கல்லில் செதுக்கிய உன் கனவுகள் – அது கொல்லும் என்னைச் சில இரவுகள் நீ நீயாக சில காலங்கள் நான் நானாக சில காலங்கள் – இன்று நாம் நாமானோம் வரும் காலங்கள் [chorus] ஆ...ஆ....ஆ....ஆ...ஆ....ஆ....ஆ.....ஆ ஓ....ஓ....ஓ.....ஓ....ஓ....ஓ....ஓ...ஓ....ஓ நீ நீயாக சில காலங்கள் நான் நானாக சில காலங்கள் – இன்று நாம் நாமானோம் வரும் காலங்கள் [verse 2] மெல்லியத் தூறலாய் உன் நினைவுகள் – அது சொல்லில் எழுதா கவிதைகள் கல்லில் செதுக்கிய உன் கனவுகள் – அது கொல்லும் என்னைச் சில இரவுகள் [verse 3] நனவும் கனவும் உன் முகம்தான் – என் மன வாசலில் கோலம் வரைகிறது தினமும் உந்தன் தரிசனம்தான் – என்னை இன்ப உலகில் சேர்க்கிறது உன்னை நிழலாய் நானும் தேடுகின்றேன் – நீ உயிராய் என்னுள் வாழுகின்றாய் வண்டாய் நானும் சுற்றுகின்றேன் – மலர் செண்டாய் நீயும் மணக்கின்றாய். [chorus] நீ நீயாக சில காலங்கள் நான் நானாக சில காலங்கள் – இன்று நாம் நாமானோம் வரும் காலங்கள் மெல்லியத் தூறலாய் உன் நினைவுகள் – அது சொல்லில் எழுதா கவிதைகள் [verse 4] இரவுக்கு நானும் தவமிருப்பேன் – உன் வரவுக்குத் வழி மேல் காத்திருப்பேன் திறந்த வானில் முழுநிலவு – நம் உறவுக்குத் தானே புதுவரவு மேகம் தூவும் பனித்துளியில் – என் தேகம் ஏனோ எரிகிறது மோகம் கொண்ட மனத்திரையில் – உன் மின்னல் முகம்தான் தெரிகிறது [chorus] ஆ...ஆ....ஆ....ஆ...ஆ....ஆ....ஆ.....ஆ ஓ....ஓ....ஓ.....ஓ....ஓ....ஓ....ஓ...ஓ....ஓ நீ நீயாக சில காலங்கள் நான் நானாக சில காலங்கள் – இன்று நாம் நாமானோம் வரும் காலங்கள் [chorus] மெல்லியத் தூறலாய் உன் நினைவுகள் – அது சொல்லில் எழுதா கவிதைகள் கல்லில் செதுக்கிய உன் கனவுகள் – அது கொல்லும் என்னைச் சில இரவுகள் மெல்லியத் தூறலாய் உன் நினைவுகள் – அது சொல்லில் எழுதா கவிதைகள்

