Song Cover Image

பனி விழும் காலைப் பொழுதில் – என்

பனி விழும் காலைப் பொழுதில் – என் கவி மனம் கவிதை பாடும் இனி வரும் மணித்துளிகள் தோறும் தனி ஒரு உலகம் தேடும்... பனி விழும் காலைப் பொழுதில் – என் கவி மனம் கவிதை பாடும் ஏ ஏ ஏ ஏ...ஓ...ஓ..ஓ விண்ணில் தவழும் மேகங்கள் – அவை கண்ணில் வரையும் ஓவியங்கள் மண்ணில் தோன்றும் செடிகொடிகள் – அது என்னில் பாடும் காவியங்கள் ஏ...ஏ.....ஏ....ஓ...ஓ...ஓ...ஓ விண்ணில் தவழும் மேகங்கள் – அவை கண்ணில் வரையும் ஓவியங்கள் மண்ணில் தோன்றும் செடிகொடிகள் – அது என்னில் பாடும் காவியங்கள் பகலில் தோன்றும் அழகையெல்லாம் அகத்தில் வைத்து போற்றுகின்றேன். பனி விழும் காலைப் பொழுதில் – என் கவி மனம் கவிதை பாடும் இனி வரும் மணித்துளிகள் தோறும் தனி ஒரு உலகம் தேடும்... பனி விழும் காலைப் பொழுதில் – என் கவி மனம் கவிதை பாடும் வானில் நீந்தும் முழுநிலவு – அது தேனாய் ஒளியைப் பொழிகிறது கண்ணைச் சிமிட்டும் விண்மீன்கள் – அவை கலையாய் அழகாய்த் தெரிகிறது... ஏ...ஏ.....ஏ....ஓ...ஓ...ஓ...ஓ வானில் நீந்தும் முழுநிலவு – அது தேனாய் ஒளியைப் பொழிகிறது கண்ணைச் சிமிட்டும் விண்மீன்கள் – அவை கலையாய் அழகாய்த் தெரிகிறது... விண்ணும் மண்ணும்தொடுகின்ற விந்தை உலகில் ஆயிரம்தான் – அது இன்னும் வாழும் நிலையறிந்து இனிதே காப்போம் நாமிணைந்து பனி விழும் காலைப் பொழுதில் – என் கவி மனம் கவிதை பாடும் இனி வரும் மணித்துளிகள் தோறும் தனி ஒரு உலகம் தேடும்... பனி விழும் காலைப் பொழுதில் – என் கவி மனம் கவிதை பாடும் ஏ ஏ ஏ ஏ...ஓ...ஓ..ஓ