
நாடித் தவம் புரிந்து -- பீடுற்ற முனிவரர் கேடற்ற தென்று கண்டு -- கூடக் கருது மொளி மாடத்தி லேறி ஞானக் -- கூடத்தில் விளையாடி ஓடத் திரிந்து கன்னி -- வேடத்தில் ரதியைப்போல் ஈடற்ற கற்பனைகள் -- காடுற்ற சிந்தனைகள் மூடிக் கிடக்கு நெஞ்சின் -- ஊடுற்றதை யமரர் தேடித் தவிக்கு மின்ப -- வீடொத் தினிமைசெய்து வேடத்தில் சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா(பீடத்தி)1 கண்ணன் திருமார்பிற் -- கலந்த கமலை யென்கோ? விண்ணவர் தொழுதிடும் -- வீரச் சிங்கா தனத்தே, நண்ணிச் சிவனுடலை -- நாடுமவ ளென்கோ? எண்ணத் திதிக்குதடா, இவள்பொன் னுடலமுதம் பெண்ணி லரசியிவள் -- பெரிய எழிலுடையாள் கண்ணுள் மணியெனக்குக் -- காத லிரதியிவள் பண்ணி லினியசுவை -- பரந்த பொழியினாள் உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா

