
வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறவில்லை எழும்புது பாட்டில் காயங்கள் ஆறவில்லை என்மனக்காட்டில் காதலும் உண்மையில்லை என்தன் வாழ்வில் வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறவில்லை எழும்புது பாட்டில் வடிந்தப்பின் சேற்றில் ஏதுமில்லை படிந்தப்பின் ஆற்றில் கரையுமில்லை உடைந்தப்பின் இதயம் ஓடவில்லை மடிந்தப்பின் சொந்த மனதுமில்லை கண்ணீரில் உன்முகம்தான் கரையவில்லை காத்திருந்த காரணம்தான் புரியவில்லை பாதையில்தான் நடக்கத் தெரியவில்லை நெஞ்சுடைந்தாலும் காதல் அழிவதில்லை வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறவில்லை எழும்புது பாட்டில் சந்திரன் வருகையில்தான் சுடர்ருமில்லை உண்மையில் சோகம்தான் போகவில்லை என்னையும்; மோகந்தான் விடவில்லை உன்னையும்; நெஞ்சம்தான் மறப்பதில்லை இதழினில் உன்சுவைதான் மாறவில்லை இனித்தது என்மனந்தான் களங்கமில்லை விழியினில் உன்நிழல்தான் நீங்கவில்லை மலர்ந்தது என்தினந்தான் ரொம்பத்தொல்லை வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறவில்லை எழும்புது பாட்டில் சிரிப்புகள் உன்மொழிதான் உண்மையில்லை விரிப்புகள் உன்வழிதான் பெண்மையில்லை கரிப்புகள் என்விழிதான் வெறுமையில்லை பறிப்புகள் உன்பழிதான் தடையும்மில்லை மடியினில் உன்குழல்தான் கிடைக்கவில்லை செவியினில் உன்குரல்தான் கேட்கவில்லை கன்னத்தை என்விரல்தான் தாங்கவில்லை பதிந்திடும் என்இதழ்தான் திகட்டவில்லை வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறவில்லை எழும்புது பாட்டில் மறக்கவே முடியாத என்சோகமில்லை மனதிலே எரியும் உன்காதலில்லை போதுமே கானல்நீர் தேவையில்லை என்றுமே காதல்என் சிறையில்லை நித்தமே தேடும் உன்மணிச்சிரிப்பில் சொந்தமே சிந்தையில் உன்நினைப்பில் சித்தமே தேடுதே உன்அரவணைப்பில் என்றுமே முடியாது உன்கதவடைப்பில் வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறவில்லை எழும்புது பாட்டில் காட்டுமல்லி வாசந்தான்நீ வருகையில் எண்ணமில்ல காதல்நான் சொல்கையில் சின்னப்புள்ள நேசந்தான்உன் முத்தத்தில் கொத்திவிட்ட பாசந்தான்நீயும் போனதில் வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறவில்லை எழும்புது பாட்டில் வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறவில்லை எழும்புது பாட்டில்

