
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
[Chorus] மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ மருள் சூழும் கானக வனமோ எங்கும் மீட்பர் சிலுவை சுமப்பேனே எங்கும் மீட்பர் சிலுவை சுமப்பேனே மலைமா நதியோ [Interlude] [Verse 1] பள்ளம் மேடு தடை தாண்டியே பசாசின் கண்ணிக்கு நீங்கியே பள்ளம் மேடு தடை தாண்டியே பசாசின் கண்ணிக்கு நீங்கியே உள்ளார்வமுடன் விண்ணின் பார்வையுடன் நான் மெள்ள மெள்ள நடந்தே எந்தன் மீட்பர் சிலுவை சுமப்பேனே எந்தன் மீட்பர் சிலுவை சுமப்பேனே மலைமா நதியோ [Interlude] [Verse 2] இன்னல் துயர் பிணி வாதையில் ஈனர் என்னை தாக்கும் வேளையில் இன்னல் துயர் பிணி வாதையில் ஈனர் என்னை தாக்கும் வேளையில் துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே நான் தூயன் பாதையில் ஊர்ந்தே அவர் தூயச் சிலுவை சுமப்பேனே அவர் தூயச் சிலுவை சுமப்பேனே மலைமா நதியோ [Interlude] [Verse 3] பூலோக மேன்மை நாடிடேன் புவி மேவும் செல்வம் தேடிடேன் பூலோக மேன்மை நாடிடேன் புவி மேவும் செல்வம் தேடிடேன் சீலன் சிலுவை சிறியேன் மேன்மை என் ஜீவன் வழி மறை இயேசுவே அவர் ஜீவ சிலுவை சுமப்பேனே அவர் ஜீவ சிலுவை சுமப்பேனே [Chorus] மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ மருள் சூழும் கானக வனமோ எங்கும் மீட்பர் சிலுவை சுமப்பேனே எங்கும் மீட்பர் சிலுவை சுமப்பேனே மலைமா நதியோ [End Music]

