
ஆயிரம் கண்கள் வேண்டுமா - 1
ஆயிரம் கண்கள் வேண்டுமா அவள் அழகினைக் காண செம்மொழிகள் நூறு வேண்டுமா அவள் புகழினைப் பாட மாதங்கம் இழைக்கத் தாங்குமா அவள் மேனி ஒளிர வென்பனி இனியும் தூங்குமா அவள் செம்மணி விரல்களைச்சேர ஆயிரம் கண்கள் வேண்டுமா அவள் அழகினைக் காண செம்மொழிகள் நூறு வேண்டுமா அவள் புகழினைப் பாட ஆழ்கடல் முத்து உருமாறுமா அவள் கால்மணிச் சிலம்பில் சேர வைரங்கல் இனியும் ஜொலிக்குமா கண் கூசிடும் சிரிப்பைக் காண மதுரைச் தமிழ்ச் சங்கம்தான் கூடுமா அவள் மொழிவதுக் கேட்க அழகிகள் போட்டிதான் நடக்குமா அவள் நடையினைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டுமா அவள் அழகினைக் காண செம்மொழிகள் நூறு வேண்டுமா அவள் புகழினைப் பாட தில்லையின் சிற்பம் நாணுமா நரம்பினில் அவள்தினம் தோன்றுவாள் மதுரையின் அம்மனும் ஏங்குவாள் கலை நயத்தையும் கடனாக வாங்குவாள் என் கனவினில் சித்திரம் தீட்டுவாள் அவள் கலங்கரை விளக்கமாய் தீஏற்றுவாள் கரங்களில் உவமைகள் காட்டுவாள் உளந்தனில் உயிரையும் வாட்டுவாள் ஆயிரம் கண்கள் வேண்டுமா அவள் அழகினைக் காண செம்மொழிகள் நூறு வேண்டுமா அவள் புகழினைப் பாடட விழிகளில் உணர்ச்சிகள் ஏற்றுவாள் பற்பல உருவத்தில் வந்து மாற்றுவாள் விரைவினில் மாலை சாற்றுவாள் என்னையும் மரணத்தில் தேற்றுவாள் சிரிப்பினில் சிற்பிகள் சீண்டுவாள் மரிப்பினில் வந்துச் சேருவாள் சிந்தையில் நெருப்பையும் காட்டுவாள் மந்தையில் என்னையும் கூட்டுவாள் ஆயிரம் கண்கள் வேண்டுமா அவள் அழகினைக் காண செம்மொழிகள் நூறு வேண்டுமா அவள் புகழினைப் பாட

