
ஆயிரம் கண்கள் வேண்டுமா அவள் அழகினைக் காண செம்மொழிகள் நூறு வேண்டுமா அவள் புகழினைப் பாட மாதங்கம் இழைக்கத் தாங்குமா அவள் இளமேனி ஒளிர எனதங்கம் இனியும் தூங்குமா அவள் செம்மணி விரல்களைச்சேர ஆயிரம் கண்கள் வேண்டுமா அவள் அழகினைக் காண செம்மொழிகள் நூறு வேண்டுமா அவள் புகழினைப் பாட ஆழ்கடல் முத்து உருமாறுமா அவள் கால்மணிக் கொலுசில் சேர வைரக்கல் இனியும் ஜொலிக்குமா கண் கூசிடும் சிரிப்பைக் காண இசைத்தமிழ்ச் சங்கம் கூடுமா அவள் மொழியதுக் கேட்க குமரிகள் போட்டி நடக்குமா அவள் நடையினைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டுமா அவள் அழகினைக் காண செம்மொழிகள் நூறு வேண்டுமா அவள் புகழினைப் பாட தில்லையின் சிற்பம் நாணுமா நடனத்தில் நாணி கோணுவான் மதுரையின் அம்மன் ஏங்குவாள் நயத்தையும் கடன் வாங்குவாள் கனவினில் சித்திரம் தீட்டுவாள் கலங்கரை விளக்கை ஏற்றுவாள் கரங்களில் உவமை காட்டுவாள் உளந்தனில் உயிரையும் வாட்டுவாள் ஆயிரம் கண்கள் வேண்டுமா அவள் அழகினைக் காண செம்மொழிகள் நூறு வேண்டுமா அவள் புகழினைப் பாட விழிகளில் உணர்ச்சிகள் ஏற்றுவாள் பற்பல உருவத்தை மாற்றுவாள் விரைவினில் மாலை சாற்றுவாள் மரணத்தில் என்னையும் தேற்றுவாள் சிந்தையில் நெருப்பைக் காட்டுவாள் சிரிப்பினில் சிற்பியைக் கூட்டுவாள் மந்தையில் என்னையும் சீண்டுவாள் என் மரிப்பினில் வந்துச் சேருவாள் ஆயிரம் கண்கள் வேண்டுமா அவள் அழகினைக் காண செம்மொழிகள் நூறு வேண்டுமா அவள் புகழினைப் பாட

