Song Cover Image

கோவி.மணிமாறனின் எண் குணத்தான்

[chorus] ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய [verse 1] இறைவா உன்னைப் பாடுகின்றேன் – நீ இருக்கும் இடம்தான் தேடுகின்றேன் இருளாய் இருக்கும் மனத்தினுள்ளே – நீ இருப்பதை நானும் மறந்துவிட்டேன் ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய உனக்குள் இருக்கும் எண் குணம்தான் – அதை எனக்குத் தெளிவாய் உணர்த்திடுவாய் தனக்கு உவமை இல்லாத – உன் அழகிய திருவடி போற்றுகின்றேன் ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய [chorus] தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய [verse 2] சுதந்திர மானவன் நீயென்று – முதல் சூத்திரம் ஒன்று சொல்கிறது தூய உடம்பு உனக்குண்டு – இந்தத் தூய்மை இல்லை உயிருக்கு இயற்கை அறிவில் மிளுருகின்றாய் – நீ இயக்கும் உயிரில் அதுவில்லை நுகர்ச்சி யின்றி அறிகின்ற – உன் முற்றறிவுக்கு இணையாய் ஏதுமில்லை. [chorus] ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய [verse 3] பாசத்தை விட்டு நீங்கியவன் – பந்த பாசங்கள் இல்லா புண்ணியவன் பாசத்தை நீக்கி உயிர் தெளிய – நீ பேரருள் கொண்டு படைக்கின்றாய் பேராற்றலின் எல்லை உனக்கில்லை – பெரும் பேறாய் உயிருக்கு அமைகின்றாய் வரமாய் வேண்டும் உயிர்களுக்கு – நீ வரம்பில் இன்பப் பேருடையாய் [chorus] ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய