Song Cover Image

பசியாறும் காமத்துப்பால் - 1

+ Show full styles
V4.5+

பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் திசைமாறும் பொருட்பால் அவள் மனங்களில் விசைமாறும் பொறுப்பால் அவள் தனங்களில் பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் விடையாவும் கொடுப்பால் அவள் சடைதனில் தடையாவும் உடைப்பால் அவள் விழிதனில் உடையாவும் கலைவால் அவள் நெகிழ்தலில் கலையாவும் அறிவால் அவள் மகிழ்தலில் பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் எழுதப்படா இளங்காதல் அவள் காதினில் எழுத முடியா கவிதை அவள் மோதலில் வரைய முடியா சித்திரம் அவள் மீதீனில் ஒளிய முடியா சத்திரம் அவள் மனதினில் பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் பிரம்மனும் மதியால் படைத்திட்ட பெண்பாலில் அன்பனும் வலியால் துடித்திட்ட அன்பால் கொம்பனும் சதியால் வடித்திட தெம்பால் கம்பனும் உளியால் செதுகிட்ட வம்பால பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் மறைய இயலாச் சந்திரன் அவள் மேனிபோல் ஒளிர முடியாச் சூரியன் அவள் ராணிபோல மலர முடியாச் மல்லிகை அவள் தேனிபோல சொல்லிட முடியாப் புதினம் அவள் பாணிபோல பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் முந்திட முடியா சுழிக்காற்று அவள் பேச்சினில் தந்திட முடியா பெருங்கொடை அவள் மூச்சினில் தங்கிட முடியா பெருவெள்ளம் அவள் மனசினில் மங்கிட இயலா மாதங்கம் அவள் தினுசனில் பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் சிக்காத மொழியில் வற்றாத மடலே என்னில் முக்காத விழியில் பற்றாத கடலே உன்னில் திக்காத பழியில் முற்றாக விடலே சொல்லில் மக்காத வழியில் சுற்றாத உடலே மண்ணில் பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில்