Song Cover Image

கோவி.மணிமாறனின் உடைந்துபோன பானையிலே

[verse 1] உடைந்துபோன பானையிலே ஆயிரம் ஓட்டை முறிந்துபோன இதயத்திலே சரிந்ததடா கோட்டை அடைந்த துன்பம் ஒன்றல்ல விளங்காத வாழ்க்கை அறிந்தவரை ஒன்றுமில்லை எல்லாமே சக்கை [verse 1] உடைந்துபோன பானையிலே ஆயிரம் ஓட்டை முறிந்துபோன இதயத்திலே சரிந்ததடா கோட்டை அடைந்த துன்பம் ஒன்றல்ல விளங்காத வாழ்க்கை அறிந்தவரை ஒன்றுமில்லை எல்லாமே சக்கை [verse 2] விடியல் வரும் வேளையிலே வெளிச்சம் வரும் இருளைத்தான் விரட்டிவிட்டு வெளிச்சம் வாழும் அடிமனதில் துன்பமெல்லாம் இருளாய் நிற்கும் அப்பாவி மனிதனுக்கு இருள்தானே உலகம் சுற்றி நிற்கும் உறவெல்லாம் வேடிக்கைப் பார்க்கும் சுட்டெரிக்கும் கண்ணீரைக் கண்டதுமே சிரிக்கும் [chorus] தனிமரமாய் உலகத்திலே இருப்பதாய் உணர்வு இனிதுறவாய்க் கிடைக்கவில்லை எல்லாமே கனவு [verse 3] உடைந்துபோன பானையிலே ஆயிரம் ஓட்டை முறிந்துபோன இதயத்திலே சரிந்ததடா கோட்டை அடைந்த துன்பம் ஒன்றல்ல விளங்காத வாழ்க்கை அறிந்தவரை ஒன்றுமில்லை எல்லாமே சக்கை [verse 4] வந்த கதை இன்னும் எனக்குப் புரியவில்லை தந்த வேடம் ஏனோ எனக்கு விளங்கவில்லை கந்தலான மனத்திரையில் எல்லாமே காயம் தந்த கடவுள் இன்னும் எனக்குள்ளே மாயம் சொந்த பந்தம் எதுவும் இங்கு நிரந்தரமில்லை சிந்தும் கண்ணீர் துளியில் கூட ஆதரவில்லை தனிமரமாய் உலகத்திலே இருப்பதாய் உணர்வு இனிதுறவாய்க் கிடைக்கவில்லை எல்லாமே கனவு [verse 5] உடைந்துபோன பானையிலே ஆயிரம் ஓட்டை முறிந்துபோன இதயத்திலே சரிந்ததடா கோட்டை அடைந்த துன்பம் ஒன்றல்ல விளங்காத வாழ்க்கை அறிந்தவரை ஒன்றுமில்லை எல்லாமே சக்கை தனிமரமாய் உலகத்திலே இருப்பதாய் உணர்வு இனிதுறவாய்க் கிடைக்கவில்லை எல்லாமே கனவு தனிமரமாய் உலகத்திலே இருப்பதாய் உணர்வு இனிதுறவாய்க் கிடைக்கவில்லை எல்லாமே கனவு