[intro] அண்ணா நகருல... [chorus]: அண்ணா நகருல? Ice cream-மு சாப்பிட்டது மறக்கல... [chorus]: அப்புறம்? [main song] நெஞ்சுக்குள்ள நெனப்பு இன்னும் போகல அந்த நெனப்புவந்தா பசி-தூக்கம் எனக்கில்ல [chorus]: உன் நெனப்புல... குண்டு குழி ரோட்டு மேல Bike-ல தான் போயி வந்தோம் அந்த நாளு மீண்டுமிங்கு திரும்புமோ அட, நீயும்-நானும் சேர்ந்து வாழ விருப்பமோ [chorus]: tell me விருப்பமோ... உன்ன என்னி பாக்குறேன் எனக்குள்ள அழுகுறேன் நெஞ்சமிங்கு வாடுதடி கண்மணி அட, நீயும்-நானும் ஆகிவிட்டோம் தனி தனி [chorus]: இப்போ தனி தனி... யாராரோ சேர்ந்திருக்க நீயும் நானும் பிரிந்திருக்க இது என்ன நியாயமுன்னு கூறம்மா அட, என்னோட நீ வாழ்ந்தாலென்ன பாவம்மா [chorus]: life - பாரம்மா.. ? [outro] உன்னையே எண்ணி நான் ஏங்கினேன்.. என் உள்ளத்தில் உன்னையேதான் தாங்கினேன்..