Song Cover Image

கோவி.மணிமாறனின் - அழகான பூமி

[verse 1] [male] அழகான பூமிப் பந்து அழுக்கானது – மனித அழுக்கான மனத்தாலே அது பழுதானது நலமான உலக வாழ்வு பறிபோனது – மனித நிலையற்ற போக்காலே இயற்கை அழியுது [muzik] [verse 2] [male] அழகான பூமிப் பந்து அழுக்கானது – மனித அழுக்கான மனத்தாலே அது பழுதானது நலமான உலக வாழ்வு பறிபோனது – மனித நிலையற்ற போக்காலே இயற்கை அழியுது அழகான பூமிப் பந்து அழுக்கானது – மனித அழுக்கான மனத்தாலே அது பழுதானது [muzik] [verse 3] [male] காட்டினை அழித்துக் கோட்டினைப் போட்டான் - அவன் நாட்டினை வளர்க்க மரங்களைச் சாய்த்தான் வேட்டினை வைத்து மலைகளைத் தகர்த்தான் - அவன் வேட்டைகள் ஆடி விலங்கினை அழித்தான் பாட்டினில் எல்லாம் அழகாய்ச் சொன்னான் - அவன் நாட்டின் அழகை மெல்லக் கெடுத்தான் [slow] பாட்டினில் எல்லாம் அழகாய்ச் சொன்னான் - அவன் நாட்டின் அழகை மெல்லக் கெடுத்தான் [muzik] [verse 4] [male] அழகான பூமிப் பந்து அழுக்கானது – மனித அழுக்கான மனத்தாலே அது பழுதானது நலமான உலக வாழ்வு பறிபோனது – மனித நிலையற்ற போக்காலே இயற்கை அழியுது அழகான பூமிப் பந்து அழுக்கானது – மனித அழுக்கான மனத்தாலே அது பழுதானது [muzik] [verse 5] [male] தரையினில் எங்கும் கழிவுகள் வீசி – அவன் மறைந்து நின்று வேடிக்கைப் பார்த்தான் திரையினைப் போட்டு சதிகளைச் செய்து – அவன் மறைவினில் வளங்களை அழித்துவிட்டான் இருக்கும் வரையில் அனைத்தையும் அழித்து – அவன் இன்னுயிர்க் கெல்லாம் தீங்கிழைத்தான் [muzik] [verse 6] [male] அழகான பூமிப் பந்து அழுக்கானது – மனித அழுக்கான மனத்தாலே அது பழுதானது நலமான உலக வாழ்வு பறிபோனது – மனித நிலையற்ற போக்காலே இயற்கை அழியுது அழகான பூமிப் பந்து அழுக்கானது – மனித அழுக்கான மனத்தாலே அது பழுதானது [muzik] [verse 7] [male] மரங்களைத் தொலைத்த மண் குமுறும் – அது வரங்களைத் தொலைத்துக் கெடும்சாபமிடும் கரங்களை உயர்த்தி குரல் கொடுப்போம் – அது மரங்களைக் காத்து மண் வளர்ப்போம் விரல்களைக் கீறி கற்றுக் கொடுப்போம் – அது விதைகளைத் தூவி மரங்களைக் காக்கும். [muzik] [verse 6] [male] அழகான பூமிப் பந்து அழுக்கானது – மனித அழுக்கான மனத்தாலே அது பழுதானது நலமான உலக வாழ்வு பறிபோனது – மனித நிலையற்ற போக்காலே இயற்கை அழியுது அழகான பூமிப் பந்து அழுக்கானது – மனித அழுக்கான மனத்தாலே அது பழுதானது [slow] அழகான பூமிப் பந்து அழுக்கானது – மனித அழுக்கான மனத்தாலே அது பழுதானது [muzik]