Song Cover Image

நெருஞ்சி முள்

V4.5+

நெருஞ்சிமுள் வடியும் நல்தேனே பெருகிப்படியும் எருக்கம் பாலே கட்டழகில் எனைமயக்கும் கடுநஞ்சே கண்ணழகு கொடுக்கு கருந்தேளே அடியவனை அழிக்கவந்த ஆலகால விஷமே வெடிக்கும் சுடர் செம்அரக்கே உறங்கிடா உறுமும் எரிமலையே விழும்வரைத் தொடரும் பெருநெருப்பே கடிதெரியா கம்பளி புழுவே வடிந்து நின்ற பெருமழைச்சேறே குடைந்து சென்ற ஆரணியக்காடே உறுதி உடைத்தெடுத்த சிற்சிறகே என்னைத் கெடுத்த அற்பப்பதறே நெருஞ்சிமுள் வடியும் நல்தேனே பெருகிப்படியும் எருக்கம் பாலே கட்டழகில் எனைமயக்கும் கடுநஞ்சே கண்ணழகு கொடுக்கு கருந்தேளே கண்ணை பறிக்கவரும் ஒளிக்கதிரே சுல்லெ சுட்டெரிக்கும் கடும்மொழியே கடலென கொந்தளிக்கும் புயல்சுழியே கரையென அடித்துடைக்கும் கொள்லையே தோஷமென மாறிய கறிவிருந்தே விஷமென மாறியே அருமருந்தே மணிமொழி பேசிய அருவருப்பே வேண்டாம் வாழ்வில் மறுபிறப்பே நெருஞ்சிமுள் வடியும் நல்தேனே பெருகிப்படியும் எருக்கம் பாலே கட்டழகில் எனைமயக்கும் கடுநஞ்சே கண்ணழகு கொடுக்கு கருந்தேளே மல்லி மணமயக்கும்; கசப்பே மஞ்சள் நிலவெனும் இருள்பசப்பே கொள்ளி விளக்கென எனைபொசுக்கே இரவென விழுங்கி எனைநசுக்கே ஆழத்தில் இழுக்கும் ஆசைக்கடலே அன்பென்று அடித்துன்னும் பேரலையே அடிமை சாசனத் தொடர்கதையே அறிவைத் தூளாக்கும் சுழிக்காற்றே நெருஞ்சிமுள் வடியும் நல்தேனே பெருகிப்படியும் எருக்கம் பாலே கட்டழகில் எனைமயக்கும் கடுநஞ்சே கண்ணழகு கொடுக்கு கருந்தேளே சாந்தியழித்திட வந்த பிடிசாம்பலே சாந்தமாய் வந்த சாபநிழலே முளைத்தக் கள்ளிச் செடியே பாலைவனக் கொடுந்தாகத் தீயே அழகெனழித்திடும் அரக்க மணமே அன்பெனத்துடிக்கும் அழிவுக் குணமே பெருந்துன்பமளித்த அபயத் தேடலே இறுதித்தீஉயிர் பறிக்கும் மூடமே நெருஞ்சிமுள் வடியும் நல்தேனே பெருகிப்படியும் எருக்கம் பாலே கட்டழகில் எனைமயக்கும் கடுநஞ்சே கண்ணழகு கொடுக்கு கருந்தேளே மல்லிமணமென பொய் தருவாய் பொங்கும் மாயைநஞ்சு தருவாய் சந்தனப்பூசிய கோபம் தருவாய் சுகமெனவந்து சோகம் தருவாய் ஆசை காற்றென வீசினாலும் அழிக்கும் புயலென சுழித்திடுவாய் அன்பின் நதியென ஓடினாலும் அழிவின் வெள்ளமாய் மூழ்கடிப்பாய் நெருஞ்சிமுள் வடியும் நல்தேனே பெருகிப்படியும் எருக்கம் பாலே கட்டழகில் எனைமயக்கும் கடுநஞ்சே கண்ணழகு கொடுக்கு கருந்தேளே அழகே… உன் அடிசுவடே பஞ்சு! அன்பே… உன் புன்சிரிப்புபே நஞ்சு! இன்பமே… என் உயிர்மரணம் கெஞ்சும் உயிரே… உன் பொன்கரங்களே மிஞ்சம் மனமே... உன் தந்திரங்கள் விஞ்சும் நெருஞ்சிமுள் வடியும் நல்தேனே பெருகிப்படியும் எருக்கம் பாலே கட்டழகில் எனைமயக்கும் கடுநஞ்சே கண்ணழகு கொடுக்கு கருந்தேளே அடியவனை அழிக்கவந்த ஆலகால விஷமே அடியவனை அழிக்கவந்த ஆலகால விஷமே