
[verse 1] [female] மறக்கும்போது நினைக்க முயல்கிறேன் – தினம் நினைக்கும்போது உன்னை மறக்க முயல்கிறேன் ஓ ஓ ஓ ஓ நேற்றுவரை ஈருடல் ஓயிராய் வந்த காதல் – அது இன்று மாறிப் போனதாலே அழுகின்றேன்...ஆ ஆ ஆ ஆ [verse 2] [male] மறக்கும்போது நினைக்க முயல்கிறேன் – தினம் நினைக்கும்போது உன்னை மறக்க முயல்கிறேன்..ஓ ஓ ஓ ஓ நேற்றுவரை ஈருடல் ஓயிராய் வந்த காதல் – அது இன்று மாறிப் போனதாலே அழுகின்றேன்...ஆ ஆ ஆ ஆ [verse 3] [female] விழியாலே மொழி பேசி வளர்ந்த காதல் – தினம் வழி மீது விழி வைத்து வளத்தக் காதல் அழியாமல் காத்திடவே உயிர்ப்பித்த காதல் – இன்று ஆழியிலே நான் விழவே முறிந்த காதல்...ஓ ஓ ஓ ஓ [verse 4] [male] சொல்லாமல் கொள்ளாமல் நீ பிரிந்தாய் முள்ளாக என் மனதில் ஏனடி நீ தைத்தாய்? பழி ஒன்றும் சொல்லாத என் மீது – வீண் பழி ஒன்றை சுமத்தி விட்டு ஏனடி சென்றாய்? ஆ..ஆ..ஆ..ஆ [verse 5] [female] மறக்கும்போது நினைக்க முயல்கிறேன் – தினம் நினைக்கும்போது உன்னை மறக்க முயல்கிறேன் ஓ ஓ ஓ ஓ நேற்றுவரை ஈருடல் ஓயிராய் வந்த காதல் – அது இன்று மாறிப் போனதாலே அழுகின்றேன்...ஆ ஆ ஆ ஆ [verse 6] [male] காதலுக்கும் நிறம் உண்டு என்பதாலே காதலை நீ வீதியிலே வீசிவிட்டாய் பாதகி நீ என் உணர்வை மறந்துவிட்டு பாதியிலே வேறொருவன் கரம் பிடித்தாய் ஆ..ஆ..ஆ..ஆ [verse 7] [male] நதியினிலே துடுப்பிழந்த சிறு படகாய் நாதியற்று நான் இங்கு வாடுகின்றேன் என்னை விட்டுப் போன ஒரு திசையினிலே உன் சுவடிகளைத் தேடி நானும் அலைகின்றேன்! ஓ ஓ ஓ ஓ [verse 8] [female] மறக்கும்போது நினைக்க முயல்கிறேன் – தினம் நினைக்கும்போது உன்னை மறக்க முயல்கிறேன் ஓ ஓ ஓ ஓ நேற்றுவரை ஈருடல் ஓயிராய் வந்த காதல் – அது இன்று மாறிப் போனதாலே அழுகின்றேன்...ஆ ஆ ஆ ஆ [verse 9] [chorus male and female] மறக்கும்போது நினைக்க முயல்கிறேன் – தினம் நினைக்கும்போது உன்னை மறக்க முயல்கிறேன் ஓ ஓ ஓ ஓ நேற்றுவரை ஈருடல் ஓயிராய் வந்த காதல் – அது இன்று மாறிப் போனதாலே அழுகின்றேன்...ஆ ஆ ஆ ஆ நேற்றுவரை ஈருடல் ஓயிராய் வந்த காதல் – அது இன்று மாறிப் போனதாலே அழுகின்றேன்...ஆ ஆ ஆ ஆ

