
காற்று வெளியிடைக் கண்ணம்மா! - Rap
காற்று வெளியிடைக் கண்ணம்மா! நின்தன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன் அமுதூற்றினை யொத்த இதழ்களும் நிலவூறித் ததும்பும் விழிகளும் பத்து மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் எனை வேற்று நினைவின்றித் தேற்றியே இங்கொர் விண்ணவ னாகப் புரியுமே!-இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன் நீ எனதின்னுயிர் கண்ணம்மா எந்த நேரமும் நிந்தனை போற்றுவேன் துயர் போயின போயின துன்பங்கள் நினை பொன் என்று கொண்ட பொழுதிலே எந்தன் வாயினிலே அமுதூறுதே கன்னம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே உயிர் தீயினிலே வளர் ஜோதியே எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே!-இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா! நின்தன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன் அமுதூற்றினை யொத்த இதழ்களும் நிலவூறித் ததும்பும் விழிகளும் பத்து மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் எனை வேற்று நினைவின்றித் தேற்றியே இங்கொர் விண்ணவ னாகப் புரியுமே!-இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன்

