Song Cover Image

உலக நன்மைக்கான பாடல்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என சொல்வோமே உலக நன்மைக்கு மனித நன்மைக்கு நாம் அனைவரும் சொல்லிக் கொள்வோமே... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என சொல்வோமே உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும் உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும் பலதொழிகள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் கலகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும் கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும் நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும் நம் கடமை அறவாழ்வில் நாட்டத்தே சிறக்கட்டும் .  வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என சொல்வோமே உலக நன்மைக்கு மனித நன்மைக்கு நாம் அனைவரும் சொல்லிக் கொள்வோமே... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என சொல்வோமே