Song Cover Image

கோவி.மணிமாறனின் ஒன்னும் புரியவில்லை

[verse 1] என் கால்கள் போகும் பாதை எங்கே எனக்குத் தெரியல மனதைத் தொட்டுக் கேட்டபோது அதற்கும் புரியல நண்பனென்று சொன்ன உறவு நிலைத்து நிற்கல கண்ணில் பட்ட ஒன்றுகூட கையில் சேரல [chorus] ஒன்னும் புரியலடா தம்பி ஒன்னும் தெரியலடா இன்னும் உலக வாழ்க்கையிலே ஒன்னும் விளங்கலடா [verse 2] நேற்றுவரை நடந்ததெல்லாம் கனவாய்த் தெரியுது இன்று நடக்கப் போவதெல்லாம் இருளில் மறையுது சோற்றுக்காக வாழும் வாழ்க்கை ஏனோ கசக்குது முற்றும் துறந்த வாழ்க்கையைத்தான் மனமும் நினைக்குது சுற்றம் குற்றம் கண்டுவிட்டால் உறவும் புளிக்குது [chorus] ஒன்னும் புரியலடா தம்பி ஒன்னும் தெரியலடா இன்னும் உலக வாழ்க்கையிலே ஒன்னும் விளங்கலடா [verse 4] என் கால்கள் போகும் பாதை எங்கே எனக்குத் தெரியல மனதைத் தொட்டுக் கேட்டபோது அதற்கும் புரியல நண்பனென்று சொன்ன உறவு நிலைத்து நிற்கல கண்ணில் பட்ட ஒன்றுகூட கையில் சேரல [verse 5] சேர்த்து வைத்த செல்வமெல்லாம் காற்றில் கரையுது சோர்ந்து விழும் வேளையிலே சோகம் சூழுது சொன்ன வார்த்தை அத்தனையும் உண்மை மறைக்குது என்ன செஞ்சும் வாழ்க்கையிலே துன்பம் கூடுது சின்ன குறை சேர்ந்துவிட்டால் பின்னால் பேசுது [chorus] ஒன்னும் புரியலடா தம்பி ஒன்னும் தெரியலடா இன்னும் உலக வாழ்க்கையிலே ஒன்னும் விளங்கலடா [verse 6] என் கால்கள் போகும் பாதை எங்கே எனக்குத் தெரியல மனதைத் தொட்டுக் கேட்டபோது அதற்கும் புரியல நண்பனென்று சொன்ன உறவு நிலைத்து நிற்கல கண்ணில் பட்ட ஒன்றுகூட கையில் சேரல [chorus] ஒன்னும் புரியலடா தம்பி ஒன்னும் தெரியலடா இன்னும் உலக வாழ்க்கையிலே ஒன்னும் விளங்கலடா [chorus] ஒன்னும் புரியலடா தம்பி ஒன்னும் தெரியலடா இன்னும் உலக வாழ்க்கையிலே ஒன்னும் விளங்கலடா