
நான் விழுந்தாலும் விண்மீன் தான் - 1
நான் விழுந்தாலும் விண்மீன் தான்... நிலா கரைந்தாலும்.... முழுமை தான்... கண்ணிரின் கடலில் மூழ்கினாலும்... அலையாய் பிறப்பேன் என்றும் புதியவன் நான்... தோல்வியின் இருட்டில் தொலைந்தேன் காலத்தின் காற்றில் கரைந்தேன் வாழ்க்கை புயலில் புதைந்தேன் வெறுமையின் மணலில் மறைந்தேன் உடைந்தபோதும் அம்பென நிற்கிறேன் விடியலுண்டு துணிந்து எழுகிறேன் இருண்ட பாதை தீயைப் போல மீண்டும் மீண்டு எழும்புவேன் நான்... நான் விழுந்தாலும் விண்மீன் தான்... நிலா கரைந்தாலும்.... முழுமை தான்... கண்ணிரின் கடலில் மூழ்கினாலும்... அலையாய் பிறப்பேன் என்றும் புதியவன் நான்... தடைகள் எல்லாம் வலிமையாகும். தனிமை எல்லாம் பாடமாகும் தவிப்பு எல்லாம் பாலமாகும் தாங்கி நின்றால் யாவும் மாறும் நான் விழுந்தாலும் விண்மீன் தான்... நிலா கரைந்தாலும்.... முழுமை தான்... கண்ணிரின் கடலில் மூழ்கினாலும்... அலையாய் பிறப்பேன் என்றும் புதியவன் நான்... மயங்கினாலும் நொறுங்கினாலும்... மவுனம் என்னை விழுங்கினாலும்... மனதின் தீதான் அணைந்திட்டாலும் மாற்றம் ஒன்றே முடிவென்றாகும்... நான் விழுந்தாலும் விண்மீன் தான்... நிலா கரைந்தாலும்.... முழுமை தான்... கண்ணிரின் கடலில் மூழ்கினாலும்... அலையாய் பிறப்பேன் என்றும் புதியவன் நான்... நேற்று தோல்விகல் என்றாலும் நேர்த்தியான சிலையாய் மாறும் இன்று என்னை அறிந்திடாமல் நாளை எந்தன் பெயரை பாடும். மனிதம் கூட மருகிப் போகும் மனங்கள் கூட உடைந்து போகும் மறதி கூட மறந்துப் போகும் உலகம் உன்னை ஓர்நாள் தேடும் துணிந்து வா நாளை மாறும் நான் விழுந்தாலும் விண்மீன் தான்... நிலா கரைந்தாலும்.... முழுமை தான்... கண்ணிரின் கடலில் மூழ்கினாலும்... அலையாய் பிறப்பேன் என்றும் புதியவன் நான்...

