திருவே நினைக்காதல் கொண்டேனே -- நினது திரு உருவே மறவா திருந்தேனே -- பல திசையில் தேடித் திரிந்திளைத் தேனே -- நினக்கும் மனம் வாடித் தினங்களைத் தேனே -- அடி, நினது பருவம் பொறுத்திருந் தேனே -- மிகவும்நம்பிக் கருவம் படைத்திருந் தேனே -- இடைம்நடுவில் பையச் சதிகள்செய் தாயே -- அதனிலுமென் மையல் வளர்தல்கண் டாயே -- அமுதமழை பெய்யக் கடைக்கண்நல் காயே -- நினதருளில் உய்யக் கருணைசெய் வாயே -- பெருமைகொண்டு வையந் தழைக்கவைப் பேனே -- அமரயுகஞ் செய்யத் துணிந்துநிற் பேனே -- அடியெனது தேனே, எனதிரு கண்ணே, -- எனையுகந்து தானே வருந்திருப் -- பெண்ணே!