Song Cover Image

கோவி.மணிமாறனின் உடைந்துபோன பானையிலே

[verse 1] உடைந்துபோன பானையிலே ஆயிரம் ஓட்டை – இந்த முறிந்துபோன இதயத்திலே சரிந்ததடா கோட்டை அடைந்த துன்பம் ஒன்றல்ல விளங்காத வாழ்க்கை – இங்கு அறிந்தவரை ஒன்றுமில்லை எல்லாமே சக்கை [verse 1] உடைந்துபோன பானையிலே ஆயிரம் ஓட்டை – இந்த முறிந்துபோன இதயத்திலே சரிந்ததடா கோட்டை அடைந்த துன்பம் ஒன்றல்ல விளங்காத வாழ்க்கை – இங்கு அறிந்தவரை ஒன்றுமில்லை எல்லாமே சக்கை [verse 2] விடியல் வரும் வேளையிலே வெளிச்சம் வரும் – இங்கு இருளைத்தான் விரட்டிவிட்டு வெளிச்சம் வாழும் அடிமனதில் துன்பமெல்லாம் இருளாய் நிற்கும் – இந்த அப்பாவி மனிதனுக்கு இருள்தானே உலகம் சுற்றி நிற்கும் உறவெல்லாம் வேடிக்கைப் பார்க்கும் சுட்டெரிக்கும் கண்ணீரைக் கண்டதுமே சிரிக்கும் [chorus] தனிமரமாய் உலகத்திலே இருப்பதாய் உணர்வு – இங்கு இனிதுறவாய்க் கிடைக்கவில்லை எல்லாமே கனவு [verse 3] உடைந்துபோன பானையிலே ஆயிரம் ஓட்டை – இந்த முறிந்துபோன இதயத்திலே சரிந்ததடா கோட்டை அடைந்த துன்பம் ஒன்றல்ல விளங்காத வாழ்க்கை – இங்கு அறிந்தவரை ஒன்றுமில்லை எல்லாமே சக்கை [verse 4] வந்த கதை இன்னும் எனக்குப் புரியவில்லை – இங்கு தந்த வேடம் ஏனோ எனக்கு விளங்கவில்லை கந்தலான மனத்திரையில் எல்லாமே காயம் – இதை தந்த கடவுள் இன்னும் எனக்குள்ளே மாயம் சொந்த பந்தம் எதுவும் இங்கு நிரந்தரமில்லை சிந்தும் கண்ணீர் துளியில் கூட ஆதரவில்லை தனிமரமாய் உலகத்திலே இருப்பதாய் உணர்வு – இங்கு இனிதுறவாய்க் கிடைக்கவில்லை எல்லாமே கனவு [verse 5] உடைந்துபோன பானையிலே ஆயிரம் ஓட்டை – இந்த முறிந்துபோன இதயத்திலே சரிந்ததடா கோட்டை அடைந்த துன்பம் ஒன்றல்ல விளங்காத வாழ்க்கை – இங்கு அறிந்தவரை ஒன்றுமில்லை எல்லாமே சக்கை தனிமரமாய் உலகத்திலே இருப்பதாய் உணர்வு – இங்கு இனிதுறவாய்க் கிடைக்கவில்லை எல்லாமே கனவு தனிமரமாய் உலகத்திலே இருப்பதாய் உணர்வு – இங்கு இனிதுறவாய்க் கிடைக்கவில்லை எல்லாமே கனவு