Song Cover Image

வாழப் படி

வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்த்தால் தெரியுமே! வாழத் தான் நாலு பணம் கைவசம் இருக்க வேண்டுமே! உழைத்தால் தான் பணம் ஈட்டலாமே! நல்ல துணை இருந்தால் போதுமே! அன்பும் பணிவும் இருந்தால் போதுமே! என்றும் நல்லபடி வாழப் போதுமே! வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்த்தால் தெரியுமே! வாழத் தான் நாலு பணம் கைவசம் இருக்க வேண்டுமே! முரண்டு பிடிக்காமல் இருந்தால் போதுமே! மோதிக் கொள்ளாமல் இருந்தால் போதுமே! உண்மை பேசினால் நம்பிக்கை மலருமே! பணத்தைச் சேமித்தால் மகிழ்ச்சி பெருகுமே! வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்த்தால் தெரியுமே! வாழத் தான் நாலு பணம் கைவசம் இருக்க வேண்டுமே! ஒற்றுமையாய் இருக்கப் பழகினால் போதுமே! காதலித்து வாழப் பழகினால் போதுமே! இறுகப் பற்றி வாழ்ந்தால் போதுமே! பிரிவின்றி நெடுநாள் வாழப் போதுமே! வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்த்தால் தெரியுமே! வாழத் தான் நாலு பணம் கைவசம் இருக்க வேண்டுமே!