Song Cover Image

சிலைகள் எம்மிடமுண்டு -2

September 8, 2024 at 7:45 PMv3.5

சிவிகைகள் எம்மிடமுண்டு! சிலைகளைக் கொண்டு வாரும்! – தூக்க, தூக்கச் சிலைகளைக் கொண்டு வாரும்! chorus [சிவிகைகள் எம்மிடமுண்டு! சிலைகளைக் கொண்டு வாரும்!] சிலுவைகள் எம்மிடமுண்டு! சிந்திப்பாரைக் கொண்டு வாரும்! – அறைய, அறையச் சிந்திப்பாரைக் கொண்டு வாரும்! chorus [சிவிகைகள் எம்மிடமுண்டு! சிலைகளைக் கொண்டு வாரும்!] போர்க்குணங்கள் எம்மிடமுண்டு! போராடு காரணங்கள் எமக்குத் தாரும்!- அடக்கி, அடக்கிப் போராடு காரணங்கள் எமக்குத் தாரும்! chorus [சிவிகைகள் எம்மிடமுண்டு! சிலைகளைக் கொண்டு வாரும்!] மயக்கங்கள் எம்மிடமுண்டு! மருத்துவங்கள் தெளியத் தாரும்!- தீர, தீரா மருத்துவங்கள் தெளியத் தாரும்! chorus [சிவிகைகள் எம்மிடமுண்டு! சிலைகளைக் கொண்டு வாரும்!] ஆடுகள் எம்மிடமுண்டு! ஆட்டுவிக்கும் கோலைப் பாரும்! காண், கண் ஆட்டுவிக்கும் கோலைப் பாரும்! chorus [சிவிகைகள் எம்மிடமுண்டு! சிலைகளைக் கொண்டு வாரும்!]

User avatar
0 / 500